search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா பொருள்"

    காஞ்சீபுரம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். #Kutka
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள பாவாஜி தெருவில் உள்ள ஒருவருக்கு சொந்தமான கடை மற்றும் அதன் அருகே உள்ள குடோனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான 50 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடையின் உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். #Kutka
    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்சில் கடத்தி வந்த 3 பேரை கைது செய்த போலீசார் குட்காவையும் பறிமுதல் செய்தனர்.
    போரூர்:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கர்நாடக மாநில அரசு பஸ்களில் பார்சல் மூலம் சென்னைக்குள் கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ராஜகுமார் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இன்று காலை பெங்களூரில் இருந்து கோயம்பேடு வந்த கர்நாடக அரசு பஸ் ஒன்று ரோகிணி தியேட்டர் அருகே நிறுத்தப்பட்டு அதில் இருந்து பார்சல் மூட்டைகள் வேனில் ஏற்றப்பட்டன.

    சந்தேகம் அடைந்த போலீசார் பார்சலை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அங்கிருந்த சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஜலும்சிங், நாராயண்சிங் புழல் பகுதியைச் சேர்ந்த ரேவத் சிங் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 250 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிடிபட்ட குட்கா பொருட்கள் எங்கிருந்து வருகிறது? அதனை அனுப்பியது யார்? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட வேன்-குட்கா மூட்டைகள்

    சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. நேற்று இரவு கீழ்ப்பாக்கம் உதவி கமி‌ஷனர் ராஜா மற்றும் போலீசார் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஹால்ஸ் சாலை, டெய்லர்ஸ் சாலை, பிளவர்ஸ் சாலையில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பெட்டி கடைகளில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

    குட்கா விற்பனையில் ஈடுபட்ட கடை ஊழியர்கள் ஜின்னா, அந்தோணி சம்சுதீன், கண்ணன், மஞ்ஜித் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஏராளமான குட்கா, ஹான்ஸ்,, மாவா பாக்கெட்டுகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். #gutka
    ×